கடந்த 2019 மே 19ஆம் திகதிக்கு முன்னர் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் ஒழுக்கத்தினை கற்றுக்கொடுக்கும் பகுதியாக படுவான்கரையிருந்தது. ஆனால் இன்று அதற்கு மாறான நிலையே காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இன்று வடகிழக்கில் போதைவஸ்து போன்ற பல்வேறு விடயங்கள் சமூகத்தினை சீரழிவு நிலைக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவேகாந்தபுரம் பகுதி மாதிரி கிராமம் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்!