தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் சுகாதாரத் தொழிலாளிகளுக்கான பதிலீட்டு அடிப்படையிலான நியமனங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களின் BT/ACLG/Adm.07/Cas/Gen/2023 ஆம் இலக்க 25.10.2023ஆம் தேதி கடிதத்தின் பிரகாரம், பதிலீட்டு அடிப்படையிலான சுகாதாரத்தொழில்களுக்கான நியமனங்களுக்கு கீழ்க்குறிப்பிடப்படும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அடிப்படைத்தகைமைகள்!

 1.விண்ணப்பத்தாரி இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.

 2. விண்ணப்பங்கள் பொறுப்பேற்கப்படும் இறுதித் தேதியன்று 18 வயது குறையாதவராகவும், 45 வயதிற்கு மேல்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

  3.நன்னடத்தை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.  சிறந்த தேகாரோக்கியம் உடையவராகவும்

 4. விண்ணப்பதாரி பிரதேச சபை எல்லைக்குள் நிரந்தர வசிப்பிடத்தினை கொண்டவராக இருத்தல் வேண்டும்.  வதிவிடச் சான்றிதழ் மூலம் உறுதிப்படுத்தல் வேண்டும்.

கல்வித்தகைமைகள்

ஆகக்குறைந்தது 08 ஆம் தரம் அல்லது 09 ஆம் தரம் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

 சேவை நிபந்தனைகள்

 இப்பதவி முற்றிலும் பதிலீட்டு அடிப்படையிலானதாகும்.

 1 2.ஊழியர் சேலாப நிதி (EPF) ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு (ETF) பங்களிப்புச் செய்தல் வேண்டும்.

தெரிவு செய்யப்படும் முறை!

 அங்கீகரிக்கப்பட்ட நேர்முகப்பரீட்சைக்குழுவினால் நேர்முகப்பரீட்சை நடத்தப்படுவதுடன், விண்ணப்பதாரி நேர்முகப்பரீட்சையின் ஒழுங்கு விதிகளுக்கமைய தெரிவு செய்யப்படுவர்.