தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

அரச நிரந்தர நியமனத்திற்கு காத்திருக்கும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

நிரந்தர 8,400 அரச   ஊழியர்களாக்குவதற்காக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிலேயே அதிக எண்ணிக்கையிலான அரச ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்,


அதற்கமைய, இந்த அமைச்சில் 495,000 ஊழியர்கள் பணிபுரிவதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்தார்.


நிரந்தரமான நியமனம்
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சரவை சு மற்றும் அதன் நிறுவனங்களில் 18 முதல் 20 வருடங்களாக நிரந்தர நியமனம் பெறாத பழைய ஊழியர்கள் இருப்பதாகவும், அவர்கள் நிரந்தர நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்